பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. விளையாட்டும், வயது வரம்பும்


போட்டியும் பரிசும்

விளையாட்டுப் பந்தயங்கள் விமரிசையாக கடந்து கொண்டிருக்கின்றன. போட்டியிடுகின்ற விளையாட்டு வீரர்கள் எல்லோரும் பந்தய மைதானத்திற்குள் காட்டில் நடைபயிலும் வரிப் புலியென காட்சியளிக்கின்றார்கள். அவர்கள் வெற்றி பெற்றால் பெறும் பரிசானது, விலை மதிக்க முடியாத ஒன்று. நாம் எதிர்பார்க்காத ஒன்று.

ஆற்றல்மிகு மறவர்களின் ஆண்மையையும், அற்புதத் திறமையையும் காணுதற்கு, அந்த நாட்டு மக்கள் மட்டும் வரவில்லை. நாட்டையாளும் ராணியே வருகை தந்திருக்கின்றார்கள். ஆவலோடு போட்டியின் முடிவைக் கண்டு கொள்ள, கண்ணிமைக்காமல் காத்திருக்கின்றார்கள். முடிவு அரசியாருக்கு சாதகமாக இருக்க வேண்டும்! அவ்வளவுதான்.

போட்டிகள் அத்தனையிலும் வெற்றிபெற்ற பலசாலியான, பராக்கிரமசாலியான வாலிபனுக்கு பரிசு வழங்கத்தான் அரசியார் வந்திருக்கிறார் என்றுதானே