பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46


செய்து களைத்த உடலுக்கு ஓய்வு நிறைந்த ஒர் எழுச்சியையும், உணர்ச்சி கலந்த மகிழ்ச்சியையும் அளிப்பதுடன், வாழ்வின் கவலைச் சுமைகளையும் மறக் திருக்கும் வாய்ப்பையும் அல்லவா வழங்குகின்றன!

படித்து என்ன பயன்? ஆனால், விளையாட்டென்ருல், நேரத்தை வீணாக்கும். வேலை, உடலை கெடுக்கும் உபயோகமற்ற செயல் என்று படித்தவர்களே கூறி உண்மையை மறுத்து, மறைத்து ஒதுங்கிக் கொள்கின்றனர். உள்ளிருந்து அரிக்கும் ஒயாக் கவலைகளில் உழன்று, ஓடாய் உடல் மாறி, வெறும் உடற்கூடாய் வாழ அவர்கள் மனம் எப்படி சம்மதிக்கின்றது என்பதுதான் புதிராக இருக்கின்றது.

சஞ்சலமற்ற, சலனமற்ற மனதுடன் சிறிது கேரம் ஆடி ஒடி அமைதிபெற அவர்கள மனம் தூண்ட வில்லையே? ஏ

ராய் ராபின்ஸன் என்ற குத்துச் சண்டை வீரர் தான்பெற்ற உலகக் குத்துச் சண்டை வீரர் என்ற பட்டத்தைக் காப்பதற்காக தனது நாற்பதாம் வயதிலே போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்.

இதுபோல் போட்டிகளில் தான் பங்கு பெற வேண்டும் என்பதில்லை. முப்பது வயதுக்குள்ளே முதுமைக் கோட்டிலே நிற்கிருேம் என்ற நோக்காட்டில் வாழ்கின்ற நம்மவர்கள் முப்பது வயதிலே விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலே வெற்றி பெறுகின்ற அயல் நாட்டுப் பெண்மணிகளையும் கண்டுணர வேண்டும்.