பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/5

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

என்னுரை

 'உடல் நலத்திற்கும் உள்ளத்தின் வளத்திற்கும் உயர்ந்த துணை, ஒப்பற்ற வழிகாட்டி விளையாட்டுக்களே: என்று எல்லோரும் இன்று மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கின்ருர்கள்.

மாணவர்கள், இளைஞர்கள் சிறப்புடன் விளையாட்டுக் களில் பங்குபெற வேண்டும் என்ற விருப்பம், இன்று நடைமுறையில் புதிய திருப்பம் பெற்றிருக்கின்றன.

தன்னிகரில்லா தமிழக அரசு, பள்ளிகளில் உடற் கல்வியைக் கட்டாயப்பாடமாக்கி, இன்று ஒரு புதிய அமைப்பையே உருவாக்கி, உலக அரங்கிலே தலையாய இடத்தை வகித்துக்கொண்டிருக்கிறது.

உடற் கல்வியின் உன்னத லட்சியங்களை இளம் நெஞ்சங்கள் ஏற்று செயல்படும் வண்ணம், ஏற்றதோர் வகையினை ஏற்படுத்தித் தந்த நல்லோர்களுக்கு, என் நெஞ்சம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசின் ஆர்வமிகு பணிக்கு ஈடுதரும் பொருட்டு, விளையாட்டுத் துறையில் அரும் பெரும் அக்கறைகொண்ட அனைவரும், அரிய பணிகளில் தலைப்பட்டிருக்கின்றனர்.

சிந்தனைக்கீடாக செயல் முறைகள் வலுப்பெற்று கிறைவேறிக் கொண்டிருக்கும் இவ்வரிய வேளையில், 'விளையாட்டு விருந்து’ எனும் எனது நூல், நல்லோர்கள் முன்னே படைக்கப்பட்டிருக்கிறது.