பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/6

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

5


பல இலட்சக்கணக்கான வாசகர்கள் வாரந்தோறும் படிக்கும் வண்ணம் தினமணி சுடரில் வெளியிட்டு, உதவி நல்கிய எனது ஆருயிர் நண்பர் அமரர் ஜாம்பவான் அவர் களை நன்றி கலந்த நெஞ்சுடன் நினைக்கிறேன்.

வாரந்தோறும் கட்டுரைகளே வெளியிட்டுப் பெருமை தந்த தினமணி சுடர் ஆசிரியர் அவர்களுக்கும் என் அன்பு கலந்த நன்றி.

எனது ஆசிரியர், விளையாட்டுத் துறையின் பெருங் தலைவராக விளங்கும் அழகப்பா உடற் கல்விக் கல்லூரி முதல்வர் டாக்டர் ராப்சன் அவர்கள் தரும் அரிய கருத்துரை களுக்கும், ஆன்ற உதவிக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

இந்நூலை அழகுற படியெடுத்துத் தந்துதவிய குமாரி மீன: எழிலுற முகப்பு வண்ணம் தீட்டித் தந்துதவிய அருமை நண்பர் ஆனந்தன் அவர்களுக்கும் என் அன்பு கலந்த நன்றி.

புத்தகம் வெளியிடுவதற்காக நான் முனைந்த நாளி லிருந்து, தனது தளராத அன்பு ஒத்துழைப்பை நல்கி. இன்று இருபது புத்தகங்களுக்கு மேலே வெளியிடும் அளவுக்குப் பேருதவி புரிந்திருக்கும் அன்பு நண்பர் திரு. M. S மணி அவர்களுக்கு, இந்த நூலைப் படைத்து வெளியிடுவதில் நான் பெருமகிழ்வுகொள்கிறேன்.

தமிழக இலக்கியத் துறையிலே, விளையாட்டுத் துறை நூல்களைத் தொடர்ந்து வெளியிடும் வண்ணம் ஊக்கமும் உற்சாகமும் தந்து ஆதரிக்கும் அன்பர்கள் அனைவருக்கு


ஞானமலர் இல்லம்

சென்னை-17                                                                                                            எஸ். நவராஜ் செல்லையா