பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 பெற்று விலகி ஒடிவிடுவதால், மனதுக்கு நல்ல கலமும் புதிய பலமும் தெம்பும் கிடைக்கிறதே ! - வெற்றி பெற வேண்டும் என்ற ஊக்க உணர்வு: பற்றுடன் ஒரு காரியத்தில் பங்கு பெறவேண்டும் என்ற பெருந்தன்மையான நோக்கம்; தனது திறமையை உணர்ந்துகொள்ளும் தன்னறிவு; தன்நிலை திரியாமல் செயல்பட்டு விளையாடும் விழுமிய நெறி, தன் திறமை முழுதையும் சிந்தாமல் சிதையாமல் சேர்த்துப் போராடும் குணம் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அடிப் படைக் குணங்களை, அனுபவங்களைத் தங்கள் குழந்: தைகளுக்குக் கற்பிக்கும் வாய்ப்பு, பெற்றேர்களுக்கு அப்பொழுது ஏற்படுகிறதே, அதுவே பெரிய வரப் பிரசாதமல்லவா! - தமது குடும்பத்தினருடன், குழந்தைகளுடன், குடும்பத் தலைவர் கலந்து விளையாடும்பொழுது, குழந் தைகள் மனப்பாங்கு விரிகிறது. சந்தேகங்களைப் போக் கிக் கொள்ளவும், தவறுகளை நீக்கிக் கொள்ளவும் திறமையை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படு வது போலவே குடும்பத் தலைவியின் மனமும், தலைவ. ருடன் சேர்ந்து விளையாடும்போது குளிர்கிறது. வெப்பம்நிறைந்த வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற்றுவிட, வீட்டுக்குள்ளே விளையாடும் பொழுது போக்கு அம்சம் சிறந்த வழிகாட்டியாகும். நேரம் கிடைக்கவில்லையே என்பதும் பெரியபிரச்சினை தான். வீட்டுக்கு வெளியே பிரச்சினைகளை சற்று விட்டு விட்டு, வீட்டுக்குள்ளே நுழைந்ததும் அன்புணர்ச்சிகளை பண்பு எழுச்சிகளை பிள்ளைகளிடம் வளர்த்து, இன்ப வாழ்வினை எதிர்காலத்தில் வாழச் செய்யும் பெரிய