பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69 செய்து கொண்டேன். என் கடமை முடிந்தது. என் மகன் வெற்றி வீரனுனுன். அது போதும். இனி எனக்கு மரண தண்டனை தந்தாலும், மன சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்வேன்.” அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பெண்ணொருத்தி விளையாட்டில் இவ்வளவு ஈடுபாடு உடையவளாக இருப்பாள் என்று யாருமே கனவிலும் கருதவில்லை. அன்றிலிருந்து கிரேக்கப் பந் தயத் தின் விதிகளிலே, ஒரு விதி தளர்ந்தது. புதிய விதி ஒன்று புகுந்தது. ஆமாம், பெண்களும் பந்தயங்களில் பங்கு பெறலாம் என்ற விதி புகுந்ததும், பெரிய விழிப் புணர்ச்சியே அந்த சமுதாயத்தில் ஏற்பட்டது.

இவ்வளவு கடைபெற்றாலும் இதற்கு முன்னமேயே ஆண்களைப் போலவே பெண்களும் ரகசியமாக ஒலிம்பிக் போன்ற விளையாட்டுப் பந்தயங்களைத் தங்களுக்குள்ளே நடத்தி வந்திருக்கின்றனர் என்னும் சரித்திரக் குறிப்புக் காணக் கிடக்கின்றது

பெண்கள் ஒடிய பந்தயம் பெண்களுக்கான போட்டியை ஆரம்பித்து வைத் தவள் ஹிப்போடோமியா என்ற கிரேக்க இளவரசி. அவள், தன்னுடைய திருமணம் பிலாப்ஸ் என்ற வீரனுடன் நடந்ததை ஒட்டி, இப்பந்தயத்தை ஆரம்பித்து வைத்தாள் என்பது ஒரு குறிப்பு.*

ஆண்களுக்கான போட்டி சீயஸ் என்ற தலைமைக் கடவுளுக்காக நடந்தது என்றால், பெண்களுக்கான


  • (ஆசிரியரின் ஒலிம்பிக் பந்தயத்தின் கதை என்ற நூலில் விரிவாக இக்கதையினைத் தெரிந்து கொள்ளலாம்.)