பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
76

அமைந்தவை ஈடன் நகரத்திம் இருந்த ஆடுகளங்கள் தான் என்பது ஆங்கில நாட்டுப் பழமொழியாகும். காரணம் என்னவாக இருக்கும்? என்று ஆராயப் புறப் படுவோர்க்கு விடை எளிது வழி இனிது. வாழ்வும் புனிதமாகவே அமையும்.

கூடினும் கோடி நன்மை ஏனெனில், பரந்து விரிந்த ஆடுகளம், பலரைக் கூடச் செய்கிறது. கூட்டி வைக்கிறது. குலவச் செய் கிறது. உணர்வுகளுடன் உலவ வைக்கிறது.

வீணுகப் பொழுதைக் கழிக்கும் இடமல்ல ஆடுகளம். வேலையற்ருேர் கூடி வாயாடி மகிழும் வம்பர் கூடாரமும் அல்ல. இரத்தத் திமிர் கொண்டோர் சத்தமிட்டு, ஒடிப் பிடித்துக் கட்டிப் புரண்டு வெறி தீர்த்துக் கொள்ளும் இடமுமல்ல ஆடுகளம். ஆடுகளம், அரிய ஆற்றல் மிகுந்த வீரர்களை உருவாக்குகின்ற அருமையான பயிற்சிக் கூடமாகும். சுமையற்ற ககமான, சுவையான இன்ப உணர்வுகளை இதயத்திலே ஆக்கித் தரும் சுத்தமான சமையற் கூடமாகும்.

நல்ல பல கருத்துக்களை, காடி நரம்புகள் எல்லாம் ஏறி இணைந்து கொள்வது போன்ற அனுபவங்களைக் காட்டி, அமைதியைக் கூட்டி, அறிவினை ஊட்டுகின்ற அற்புத பள்ளிக்கூடமாகும்.

மனம் உண்டானுல் மார்க்கமுண்டு என்பது பழமொழி. அதுபோல்தான் மனம் விரும்பி, மார்க்கமும் புரிந்தால்தான் ஒருவன் ஆடுகளம் கோக்கி வரமுடியும்.