பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83 படுத்திச் சிறந்த வலிய உடல் அமைத்துத் தந்ததும், பிறந்த மேனியுடனேயே ஒலிம்பிக் பந்தயங்களிலே ஒடவிட்ட நிலையும் எல்லாமே அவர்கள் உடல்மேல் கொண்டிருந்த ஒப்பில்லா ஆர்வத்தையும், உவப்பையும் அல்லவா காட்டுகின்றன ! இனி அவர்கள் கொண்டிருந்த உடலமைப்பின் மினைப்பைக் காண்போம். சிந்தனையும் சிலையும் வலிமையான உடலில்தான் வலிமையான மனம் வாழும், என்று தெளிவான நம்பிக்கை கொண்டிருந்தது போலவே, வலிமையான உடலில்தான் வனப்பும் வாழும் என்றும் ஆழ்ந்த நம்பிக்கையையும் கிரேக்கர்கள் கொண் டிருந்தன. கைகள், கால்களில் இருந்துதான் சக்தி நிறைய வருகிறது. அத்துடன் இடுப்பின் தசைகளில் இருந்து தான் அதிக சக்தி கிடைக்கிறது’ என்றும் நம்பினர். அதன்படியேதான் கி. மு. 6ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த கிரேக்கர்கள் வாழ்ந்தனர். அதன் விளைவுதான் அவர்கள் அற்புதம் என்று போற்றிப் புகழ்ந்து பாடி வடித்த ஹெர்குலிஸ் சிலை அமைப்பு இருந்தது. முரட்டு உடம்பு, மென்மையான குறுந்தாடி, மெரு கேறிய மீசை கொண்ட சில போல, முரட்டுத் தனமாக உடம்பை வளர்த்து வைத்து மகிழ்ந்த இனத்திலே மாறுதல் நிகழத்தான் செய்தது. ஆம். கி. மு. 5ஆம் நூற்ருண்டில் இந்த இனமே தன் கொள்கையைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டது.