பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 வலிமையான கனத்த உடம்பே வனப்புள்ளது. என்ற நிலைமாறி, ஆண்மையுடன் அவயவங்களின் அமைப்பும் இருந்தால்தான் அழகு வரும், பொலிவு தரும் என்று உணரத் தொடங்கினர். அதற்கு ஏற்றவாறு உடல் அமைப்பை வாளிப்பான முறையில் வகைப் படுத்திக் கொள்ளவும் தலைப்பட்டனர். ஒடுத ற்கேற்றவாறு அகலமான நெஞ்சு, கை வீசி நடப்பதற்கேற்றவாறு மேலுயர்ந்த தோள்கள்; இறுகிய வலிய அடி வயிற்றுத் தசைகள்; அதிகத் தசை பிடிக்காத கெண்டைக்கால் தசைகள் தொடை தசைகள் தேவை. அவைதான் அமைப்பை உயர்த்திக் காட்டும் என்று எண்ணி, அதற்கேற்றவாறு உடலமைப்பைக் கொண் டிருந்த குத்துச் சண்டை வீரன் தீசஸ் என்பாரின் சிலை அமைத்து உதாரணமாக்கி வாழ்ந்தனர். யுத்தம் நிறைக்க வாழ்க்கையாகவே கிரேக்கர்களுக்கு இருந்தபொழுது, வலிமையே பெருமையாக இருந்தது. சண்டை ஓய்ந்து சமாதானம் கிலவிய காலத்து, வாளிப்பான உடலமைப்பே வனப்பு மிகுந்தது என்ற கினைவே ஓங்கி இருந்தது. காலம் மாறிக்கொண்டே வந்தது. உடலைப் பயன் படுத்தி விளையாடும் உடலாளர்கள் (Athletes) எல்லாம் கிரேக்க காலத்து உடல் அமைப்பை ஏற்றுக் கொள் கின்ற நிலையில் இல்லை. அவர்களும் தங்கள் உடலமைப்பை வேறு புதிய முறையில் மாற்றி வைத்துக் கொள்ளத் தலைப்பட்டனர். பழங்கால சிலை அமைப்பை விடுத்து, புதிய சிலை ஒன்றை, அதுவும் எல்லா உடலமைப்புக்கும் பொருந்து கின்ற வகையில் சிலை ஒன்றை அமைக்க வேண்டும்.