பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
86

வளைய என்னால் முடியாது' என்று வில்லாக வளைந்திருக்கும் முதுகு. இடித்துக் கொண்டே நடை பழகும் முழங்காலமைப்பு எல்லாம் எதைக் காட்டுகிறது?

இவைகளைத்தான் இன்றைய நாகரீகம் சிறந்த உடலமைப்பு என்றல்லவா ஏற்றுக் கொண்டிருக்கிறது! நாம் என்ன செய்ய முடியும்? ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். இல்லை என்றால், நாகரீகமற்றவர்கள் என்று நான்கு பேர் நம்மை ஏளனம் செய்வார்களோ' என்று நல்ல உடல் அமைப்புக் கொண்டவர்களும் பயந்து தரம் மாறுகின்ற அளவுக்கு நாகரீகம் இன்று உடலைத் தீண்டும் நச்சுப் பாம்பாக மாறி இருக்கிறதே!

இவ்வளவும் கூறிய பிறகு, உங்கள் உடலமைப்பு எப்படி? என்று கேட்க வேண்டும் போல் இருக்கிறது.

உலகத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் முக அமைப்பிலும், ரேகை அமைப்பிலும், முடிந்த அளவு முற்றிலும் மாறுபட்டே இருக்கின்றார்கள்.

பரம்பரை மரபு, பழக்க வழக்கங்கள், பணி செய்யும் முறைகள் அனைத்தும் ஒருவரது உடலமைப்புக்குப் பொறுப்பேற்று இருக்கின்றன என்று கருதுவோரும் உண்டு.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இருந்த ஆராய்ச்சியாளர்கள், தனி மனிதனின் குணாதிசயங்களே அவனது உடலமைப்பை உருவாக்குகின்றன என்றும் நம்பினர்.

உடல் அமையும் விதம்

அவர்கள் கூறிய குணாதிசயங்களில் நான்கு வித குணங்கள் மிக முக்கியமானவையாகும். கடுமையாகக் கோபப்படுதல், கிளர்ச்சி நிறைந்த எழுச்சி மிக்க