பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
88

குள்ள அமைப்பு (Ectomorph): மெலிந்த எலும்புகளால் அமைந்த உடலமைப்பு. அதே நேரத்தில் நிறைந்த சக்தி வாய்ந்த, எடுப்புமிகுந்த அமைப்பாகவும் இருக்கும். தலை, முட்டை வடிவ அமைப் பும், ஆங்காங்கே திரண்டிருக்கும் தசைத் திரள்களும், சக்தி வாய்ந்த நுரையீரலும், சிறிய வயிற்றமைப்பும் உள்ள உடலமைப்பு.

அடிக்கடி உண்ண விரும்பும் ஆர்வமுள்ள இவ் வுடல் அமைப்பு உள்ளவர்கள் தங்கள் முழு சக்தியை யும் பயன்படுத்தி, தங்கள் திறமையை முழுமூச்சாக வெளிப்படுத்திக் காரியம் ஆற்றுகின்ற தெம்பு நிறைந் தவர்களாவார்கள்.

நடுத்தர உடலமைப்பு (Mesomorph) :

முன்னர் கூறிய இரண்டு உடலமைப்புக்களுக்கும் இடைப்பட்ட அமைப்பாகும். அளவான, அழகான தரமான மனிதர்களுக்கேற்ற மனேகரமான உடலமைப் புக் கொண்டதாகும். உலகில் உள்ள சிறந்த விளை யாட்டு வீரர்கள் அனைவரும் இந்த கடுத்தர அமைப்பு உள்ளவர்களாகவே விளங்குகின்ருர்கள்.

உங்கள் உடலமைப்பு எத்தகையது என்று புரிந்து கொண்டால், அன்ருட வாழ்க்கை முறையை அளவோடு அமைத்து வளமாக முயற்சித்து நலமாக வாழ வழி வகுக்கலாம் அல்லவா!

இத்தகைய உடலமைப்புக்கள் ஆராய்ச்சிக்காகத் தான் பகுக்கப்பட்டிருக்கின்றன என்ருலும், எடுத்து