பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


உயரத்தை ஏற்றித் தாண்டிக்கொண்டே இருக்கலாம். அவருக்கும் அந்த ‘மூன்று முறை தவறினால்' என்ற விதியுண்டு, அவருக்குத் தனியே, பலமுறை தாண்டுகின்ற வாய்ப்பினைத் தரக்கூடாது.

ஒவ்வொரு முறை குறுக்குக் குச்சி உயர்த்தப் படுகின்ற பொழுதும், உடலாளர் தாண்டுவதற்கு முன்னமேயே அந்த உயரம் அளந்து கொள்ளப்பட வேண்டும். அந்த உயரத்தையும் குறுக்குக் குச்சியின் நடுவிலிருந்து அதற்கு நேர்க்கோட்டிலுள்ள தரைப் பகுதி வரைக்கும் தகட்டாலான அளவை நாடாவைப் பயன்படுத்தியே அளக்க வேண்டும்.

ஒவ்வொரு உடலாளரின் தாண்டுவதற்குரிய வரிசை முறையும், குலுக்குச் சீட்டின் மூலமே நிர்ணயிக்க வேண்டும்.

இந்தப் போட்டியில் சமநிலை வந்தால் (Tie) எப்படி சமாளிப்பது என்பதைக் கோலூன்றித் தாண்டும் போட்டி நிகழ்ச்சிப் பகுதியில் காண்க.

2. கோலூன்றித் தாண்டல் (Pole Vault)

உயரத் தாண்டும் போட்டிக்குரிய விதி முறைகள் தான் இந்தப் போட்டிக்கும் உண்ட என்றாலும், அடிப்படையில் சில மாறுதல்கள் உண்டு.

கோலுடன் ஓடிவந்து தாண்ட தாண்ட வேண்டுமல்லவா! அவ்வாறு வேகமாக ஓடிவந்து, கோலூன்றும் பெட்டியில் வேகமாக ஊன்றி மேலே தாண்டுவதற்கு ஏற்ற சக்தி கிடைக்கும், சரியான