பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


அந்தக் குறைந்த வாய்ப்பினைக் கொண்டிருக்கின்றாரோ, அவருக்கே முதலிடத்தைத் தர வேண்டும்.

2. இந்த முறையிலே எல்லோரும் ஒரே நிலையில் இருந்தால் அந்தப் போட்டியில், கடைசி உயரத்தைத் தாண்ட முடியாமல், தவறிழைத்த எண்ணிக்கையைக் கூட்டி, அதில் அதிகக் குறைவாக யார் தவறிழைத்திருக்கிறார்கள் (Less Numbers of Fouls) என்று கண்டுபிடித்து, அவருக்கே முதலாவது இடத்தைத் தர வேண்டும்.

3. மேலே கூறிய இரண்டு முறைகளையும் பயன்படுத்திய பிறகு, இன்னும் சிக்கல் இருந்தால், இந்த நிகழ்ச்சியில் கடைசியாகத் தாண்ட முடியாமல் போன உயரத்திற்கான முயற்சியையும் சேர்த்து, அந்த முயற்சிகளில், யார், குறைந்த எண்ணிக்கையில் தாண்டும் முயற்சியைக் கொண்டிருக்கின்றார்களோ (Number of Attempts) அவரே முதலாவது இடத்திற்கு உரியவர் என்று குறிக்க வேண்டும்.

இன்னும் சிக்கல் தீரவில்லை , குழப்பம் மாறவில்லை என்றால் சமநிலையில் உள்ள உடலாளர்களையெல்லாம் ஒருசேர அழைத்து, கடைசியாக அவர்கள் தாண்ட முடியாமல் தோற்ற உயரத்தைத் தாண்டுமாறு கூற வேண்டும். அதில் ஒரே முயற்சியில் யார் வெற்றி பெறுகின்றாரோ, அவரே வெற்றி பெற்றவராவார்.

யாராலும் அந்த உயரத்தைத் தாண்டமுடிய வில்லை என்றால், இன்னும் ஓரங்குலம் கீழே இறக்கி