பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா

[] 107


வைத்துத் தாண்டுமாறு கூறவேண்டும். அந்த உயரத்தை, முதல் முயற்சியில் யார் தாண்டி வெற்றி பெறுகின்றாரோ, அவரே முதலாம் இடத்தைப் பெறுகின்ற தகுதியடைகின்றார்.

அதிலும் சிக்கல் உடையவில்லை என்றால், குறுக்குக் குச்சியின் உயரத்தை இன்னும் கீழே இறக்கிக் கொண்டே வர வேண்டும். யார் முதல் முயற்சியில் வெற்றி பெறுகின்றார் என்பதைக் கண்டு பிடித்தே சிக்கலைத் தீர்த்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

இரண்டாவது, மூன்றாவது இடத்திற்கு இது போல் போட்டி ஏற்பட்டு, சிக்கல் வந்தால், அந்தந்த வெற்றிக்குரிய இடத்தை அவரவர்களுக்கு அப்படியே அளித்துவிட வேண்டும். இரண்டாம் இடத்திற்கு 2 பேர் இருந்தால் இருவரும் இரண்டாம் இடத்திற்குரியவர் என்றே தீர்மானிக்க வேண்டும்.

3. நீளத்தாண்ட ல் (Long Jump)

நீளத்தாண்டலுக்கும், மும்முறைத் தாண்டலுக்கும், கோலூன்றித் தாண்டலுக்கும் ஓடிவரும் பாதையின் நீளமானது குறைந்தது 150 அடியிலிருந்து 147'6" இருக்க வேண்டும்.

ஒவ்வொரு உடலாளருக்கும் 4 முறை தாண்டுகின்ற வாய்ப்புக்கள் உண்டு. அவற்றில் அதிக தூரம் தாண்டிக் குதித்த 6 பேரைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் அந்த ஆறு பேருக்கு 3 வாய்ப்புக்கள் கொடுக்க வேண்டும்.