பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா [] 115


ஆனால், இரு கைகளையும் தட்டை எறியப் பயன்படுத்தக் கூடாது. அது தவறாகும்.

எறிப் பரப்பிற்குள்ளே விழுகின்ற எறிதான் (Throw) சரியான எறியாகும்.

இரும்புக் குண்டெறிதலுக்கான அத்தனை விதி களும் இதற்கும் பொருந்தும் என்பதால், அதற் குரிய விதிகளைப் பின்பற்றுக.

8. வேலெறிதல் (Javelin Throwing) வேலெறிவதற்காக வேகமாக ஒடி வருகின்ற ஒடிவரும் பாதையின் நீளம் குறைந்தது 120 அடியாவது இருக்க வேண்டும்.

ஒடி வருபவர் வேகமாக ஓடிவந்து எறிந்தாலும் வேலில் உள்ள 'பிடிப்பில்' (Grip) இருந்து பிடித்துக் கொண்டுதான் வேலினை எறியவேண்டும்.

எறியப் பெற்ற வேலானது தரையில் தனது தலைப்பாகமான இரும்புக் கூர்முனையில் குத்திக் கொண்டு விழுந்தால் தான் அது சரியான எறியாகும்.

எறிந்த பிறகும்கூட, எதிரில் உள்ள கோடுகளைத் தொடவோ, தாண்டவோ கூடாது. ஆனால் எறிந்த பிறகு, பக்கவாட்டில் உள்ள கோடுகளைத் தாண்டிக் கொண்டு செல்லலாம்.

வேலை, சுற்றி எறியக்கூடாது. தோளுக்கு மேலே இரும்புக்குண்டு எறிவதுபோல வைத்தோ, எறியப் பயன்படும் கைக்கு மேல் பகுதியில் வைத்தோதான், வேலை வேகமாக எறியலாம்.