பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எஸ். நவராஜ் செல்லையா

121


6. தொடரோட்டக் குறுந்தடிகள் (6) 7. வட்டத்தின் முடிவெல்லைக் கோட்டில் இருக்கம் நடுவர்களுக்கும், நேரக் காப்பாளர்களுக்கும் அமர்ந்திருக்க உயர்ந்த மேடை போன்ற இருக்கை கள்.

கள நிகழ்ச்சிகளுக்குத் தேவையான பொருட்கள் 1, 12 அல்லது 16 பவுண்டு எடையுள்ள இரும்புக் குண்டு 2. தட்டு (Discus)

3. வேல்(Javelin)
4. கைப்பிடியுள்ள இரும்புக் குண்டு (Hammer) மேலும்

2 அல்லது 3 மாற்றுக் கைப்பிடிகள். 5. (தேவையான பொழுது, சாதனங்களை அளந்து பார்க்க) எடை அளக்கும் எந்திரம்.

6. உயரத்தாண்ட, கோலுன்றித் தாண்டப்

பயன்படும் உயரக் கம்பங்கள் . 7. தாண்ட உதவும் குறுக்குக் குச்சிகள் (5 அல்லது 6)

8. தாண்ட உதவும் கோல் (Pole) 

9. கோலுன்றித் தாண்டும் போட்டியில், உயரத்தில் உள்ள குறுக்குக் குச்சியை உயரமான இடத்தில் வைக்க உதவும் திரிசூலம் போன்ற அமைப்புள்ள குச்சிகள்.

10. தாண்ட ப்பெற்ற உயரத்தை அளக்க உதவும்

அளவையுள்ள கோல்.