பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எஸ். நவராஜ் செல்லையா

[] 123


ஒடிவரும் தரைப்பகுதியானது, மேடு பள்ளமில்லாத தாக (கூடுமானவரை, சமதளமாக ஆக்கப்பட் டிருக்கின்றதா என்பதைப்) பார்த்துக் கொள்ள வேண்டும்.

இ. நீளத்தாண்டல், மும்முறைத் தாண்டலுக்காக உதவும் உதைத்தெழும்பும் பலகைகளை சுத்தமாகத் தெரியும்படி, சுண்ணாம்பு போட்டு வெள்ளை வண்ணத் தோடு வைத்திருக்க வேண்டும்.

ஈ. தட்டெறிதல், இரும்புக் குண்டு எறிதல், இரும்புக் குண்டு வீசி எறிதல் போன்ற போட்டி நிகழ்ச்சிகளுக்குரிய வட்டங்களையும், அவைகளுக் குரிய எறி பரப்புகளையும் (Throwing Sector) தெளி வாகக் கோடிட்டிருக்கின்றனவா என்பதையும் முன்கூட்டியே தயாராகப் பார்த்து வைத்திருக்க வேண்டும்.

இனி, விழாவுக்குத் தேவையான, பொதுவான பொருட்கள் என்னவென்பதையும் எடுத்துத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

1 வெற்றி எண்களைக் குறித்து வைக்கப் பெரிய கரும்பலகை.

2. அறிவிப்பதற்காக ஒலிபெருக்கிக் குழாய்.

3. தனிப்பட்ட உடலாளரின் வெற்றி எண்களைக் குறிக்கும் பதிவுத்தாள் (Score Sheet)

4. அடியில் வைத்தெழுதும் அட்டை, காகிதம்,

காகிதக் கவ்விகள் (Pins) பென்சில்கள்.