பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். நவராஜ் செல்லையா U 1.31 பானமோ எதையும் ஒட்டப் பந்தயத்தின் நடுவிலே யாரும், எவரிடமிருந்தும் பெறக் கூடாது. இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு இடந்தராமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும். கள நிகழ்ச்சிகள் நடக்கும்போதும் சரி, நடந்து முடிந்த பிறகும் சரி, நீளத்தையோ அல்லது உயரத்தையோ அளந்து வைத்திருக்கும் குறிப்பாளரைச் சுற்றி உடலாளர்கள் அல்லது மற்றவர்கள் கூடி தாங்களே ஒர் முடிவினை எடுக்க முயற்சிப்பார்கள். இது போன்ற சூழ்நிலைக்கு இடந்தராமலும், வேடிக்கை பார்ப்பவர்களே முடிவினைக் கூற வருகின்ற இக்கட்டான நிலைக்கு விட்டுவிடாமலும், அதிகாரிகளே ஒரு முகமாக முடிவினை எடுக்க வேண்டும். அந்த முடிவும் முடிவானதாக, உறுதி யானதாக அமைய வேண்டும். போட்டிற்குரிய பிரிவுகளும் நிகழ்ச்சிகளும் மாநில அளவில் போட்டிகள் நடக்கின்றன என்றால் அந்த விழாக் குழுவினர், வயதினைக் கொண்டே ஆடவர் (Men) என்றும், இளையோர் (Boys) என்றும் பிரித்து விடுகின்றனர். அதற்கென்று வயது வரம்பையும் வகுத்து விடுகின்றனர். # பள்ளிகளில் நடக்கின்ற போட்டிகள் என்றால், ஒரு சில இடங்களில், வயதை மட்டும் கணக்கிட்டுப் பிரிக்கின்றனர். இன்னும் சில இடங்களில், வயதையும் உயரத்தையும் சேர்த்துக் கொள்கின்றனர். பல பள்ளிகளில், வயதுடன், உயரத்தை அங்குலமாகவும்,