பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



136 []விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


அவர்களும் முதல் நாள், 100 மீட்டர் தடை தாண்டி ஒட்டம், இரும்புக் குண்டு எறிதல், உயரத் தாண்டல் முதலிய நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றும்:

இரண்டாம் நாளில், நீளத்தாண்டல், 200 மீட்டர் விரைவோட்டம் முதலியவற்றில் பங்குபெற்றும், அதிக வெற்றி எண்கள் பெற்றும் விருதினைப் பெறுவர்.

பரிசும் சான்றிதழ்களும்

          விழா நடைபெறுகின்ற இறுதி நாளின் மாலைப் பொழுதில், விழாவில் கலந்து கொண்டு, தலைமை தாங்கி வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசினை வழங்குவதற்காக ஒருவரைத் தேர்ந்தெடுத்து. சம்மதம் பெற்று, அவரை வரவழைத்து, இருக்கை தந்து பெருமைப்படுத்துவது விழாக் குழுவினரின் பொறுப் பாகும்.

உடலாண்மைப் போட்டிநிகழ்ச்சிகளின் இறுதிப் போட்டிகள் நடந்து, முடிவு தெரிந்துகொண்டிருக்கும் பொழுதே, வெற்றி பெற்றவர்களின் பெயர்களை, அவர்களுக்குரிய சான்றிதழ்களில் எழுதி வைத்துக் கொண்டிருப்பது மிக முக்கியமான காரியமாகும்.

இதைப்போலவே, முன்கூட்டியே திட்டமிட்டு, எந்தெந்தப் போட்டிகளுக்கு என்னென்னப் பரிசுகள் என்பதைத் தீர்மானித்து, வாங்கி, அந்தந்தப் பரிசுப் பொருள்களில் நிகழ்ச்சியின் பெயரை ஒரு துண்டுத் தாளில் எழுதி ஒட்டிவிடுவதும் சிறந்ததாகும். அது, கடைசி நேரத்திலே, குழப்பம் வராமல் காக்கும்.