பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


எழுதவும்; அதைப் பிழையின்றி அச்சிட்டு, உரிய வகையில் பங்கேற்கின்ற நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கவும் போன்ற காரியங்களைக் கணக்காகக் கவனித்துக் கொள்கின்ற அவகாசம் இருக்கும்.

ஆகவேதான், முன்கூட்டியே, ‘தாமதப்படுத் தாமல், பெயர்ப் பட்டியலை உரிய முறையில் அனுப்பி வைக்க வேண்டும்’ என்று எழுதி அனுப்புதல் வேண் டும்.

2. பந்தயத் திடல் பராமரிக்கும் குழு (Grounds Committee)

விளம்பர வேலைகளும், விழாவில் பங்கேற் கின்ற உடலாளர்களின் பட்டியலை வரவேற்றுத் தொகுத்துக் கொண்டிருக்கின்ற குழுவினரின் பணிகள் ஒருபுறமும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் போது, மறுபுறம் பந்தயத் திடல் பராமரிப்புக் குழுவின் பணி, மைதானத்தை செழுமைப்படுத்திக் கொண் டிருக்க வேண்டும்.

பொதுக்குழுவின் பணியானது, பந்தயம் நடத்து கின்ற மைதானத்தைக் குறிப்பிட்டு இடத்தைக் காட்டிவிடும். விழா நடத்துகின்றவர்களுக்கே சொந்த மாகப் பந்தயத் திடல் இருந்துவிட்டால் கவலையில்லை.

அது வேறொரு நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்துவிட்டால் என்ன செய்வது? அங்கேதான் குழுவின் கடமை தொடங்குகிறது.

வேறு ஒரு நிறுவனத்திற்கு உரிமையுள்ளதாக மைதானம் இருந்தால், அதை முன்கூட்டியே உரிமை