பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எஸ். நவராஜ் செல்லையா

[] 19


யாளரிடம் முறையுடன் அணுகிக் கேட்டு, விழா நடத்துகின்ற அனுமதியைப் பெற வேண்டும்.

அதற்கும் அனுமதி கிடைத்து விட்டால், அவர்களிடம் அந்த அனுமதியை எழுத்து மூலமாகக் கேட்டு எழுதிப் பெற்றுக்கொள்ளுவது நல்லது. அது பின்னால் வர இருக்கும் பல குழப்பங்களையும், இடைஞ்சல்களையும் தடுத்து நிறுத்துவதற்குக் காப்பாக இருக்கும்.

இவ்வாறு அனுமதி பெற்றவுடன், பந்தயத் திடலை எவ்வாறு பராமரித்து, திடலைத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் திட்ட மிட்டுத்தான் செயல்பட வேண்டும்.

பந்தய விழாவிற்குப் பந்தயத் திடல்தானே மிக முக்கியம். அதை அற்புதமான முறையிலே கோடிட்டு அளவிட்டு, நிகழ்ச்சிகள் சரளமாக நடைபெறும் வண்ணம் தயாராக வைத்திருப்பதுதான் திட்ட மிடுதலின் முக்கிய நோக்கமாகும். இந்தக் கருத்தை . விழாக் குழுவினர் மனதில் நன்கு பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

விழாவின் வெற்றியும், தோல்வியும் மைதானத் தைத் தயாராக வைத்திருக்கும் மகிமையில்தான் அமைந்திருக்கிறது.

வருகின்ற பார்வையாளர்களையும், விளை யாட்டு ரசிகர்களையும் வசப்படுத்தி, உடலாண்மை நிகழ்ச்சிகளிலே மனதை மாற்றாமல் உணர்ச்சியோடு ஈடுபடுத்த வேண்டுமானால், உடலாளர்களும் உள்ளம்