பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 L விளையாட்டு விழா நடத்துவது எப்படி? தேசிய அளவு போட்டியாக இருந்தால், குறைந்தது (11 மீட்டருக்கு) 36 அடிக்குக் குறையாமல் பலகை பதிக்கப் பெறுதல் வேண்டும் என்பது விதி முறையாகும். 4. Geen goII6öIsflä5 g;II6öUTL-6o (Pole Vault) உயரத் தாண்டலுக்குத் தேவையான இரு கம்பங்களைப் போலவே, இரு பக்கங்களிலும் அங்குலம் அங்குலமாகத் துளை வைக்கப் பெற்ற உயர்ந்த கம்பங்கள் தேவை. எவ்வளவு உயரம் என்றால், அது கடத்தப் பெறுகின்ற போட்டியையும், அதில் பங்கு பெறுவோரின் தாண்டிக் குதிக்கும் ஆற்றலையும் பொறுத்தே அமையும் என்றாலும், கம்பங்களின் உயரம் குறைந்தது 16 அடியாவது இருப்பது நல்லது. தாண்டி விழும் மணற் பகுதியின் பரப்பளவு 6 மீட்டர் அகலமும் (16 4') 5 மீட்டர் நீளமும் இருக்க வேண்டும். இரண்டு நெடுங்கம்பங்களை நிறுத்திவைக்கின்ற இடைவெளியானது 12 அடியிலிருந்து 14 அடி 2 அங்குலம் வரை இருக்கலாம்.

கம்பங்களுக்குக் குறுக்கே வைக்கப் பெறு கின்ற குறுக்குக் குச்சி (Cross Bar) மரத்தாலோ உலோகத்தாலோ அல்லது பொருத்தமான பொருளி னாலோ முக்கோணம் அல்லது உருண்டை வடிவ அமைப்பிலோ செய்யப்பெற்றதாக இருக்க வேண்டும்.