பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா [] 31

முக்கோண அமைப்பில் உள்ள குறுக்குக் குச்சியால், தாண்டிக் குதிப்போருக்கு ஏதாவது 'ஆபத்து வரலாம் என்பதற்காகவே முக்கோண வடிவமுள்ள குறுக்குக் குச்சி முனை மழுங்கியதாகவும், அந்தப் பக்கத்தின் அகலம்" (30 மி.மீ) அகலமும் 1 அங்குலத்தில் இருந்து 18" (25 மி.மீ. -30 மி.மீ) வரை விட்டம் உள்ளதாகவும் இருத்தல் வேண்டும்.

அதன் நீளம் 12 அடி 8 அங்குலத்திலிருந்து 14 அடி 10 அங்குலம் வரையிலும் (3.86 மீ 4.52 மீட்டர் வரை), எடையானது 5 பவுண்டு உள்ளதாகவும் அமைந் திருத்தல் வேண்டும்.

குறுக்குக் குச்சி உருண்டை வடிவமுள்ளதாக இருந்தால், அதன் சுற்றளவு 1"x6 "வரை இருக்கலாம்.

குறுக்குச் குச்சியின் நீளம் ஒரே அளவில் 14 அடிதூரமும் இல்லையென்றால், இரண்டு பிரிவாகக் குச்சிகளை வைத்து, நடுவிலே இரும்புக் கவ்வியை (Clip) வைத்து பிடித்துக் கொள்ளவும் செய்யலாம்.

நெடுங்கம்பங்களில் துளை வைத்து, அதில் ஆணியை செருகி, அதில் குறுக்குக் குச்சியையும் வைக்கலாம்.

பின்புறம் பொருந்தி வைக்கும் ஆணிகளைவிட, அபாயமில்லாத வேறொரு உபாயத்தையும் கடைப் பிடிக்கலாம்.

இரு நெடுங்கம்பங்களில் (உயரத் தாண்டலுக்கு உதவுவதுபோல) 3" நீளமுள்ள தாங்கிகளை எதிர்ப்