பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. அதிகாரிகளும் அவரது கடமைகளும் விளையாட்டு விழா நடத்துவதற்கேற்றவாறு முன்னேற்பாடுகளைச் செய்தவுடன், விழா நடத்துகின்ற குறிப்பிட்ட நாளில், முக்கியப் பொறுப்பேற்று நடத்தித் தர மூன்று பேர் முக்கியமான பெரும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள்: மேலாளர் (Manager) செயலாளர் (Secretary) நுண்ணியல் (Technical Manager)

அவர்களின் பொறுப்பும், பரிபூரண ஒத்துழைப் புமே விழா வெற்றிகரமாக நடந்தேறுவதற்குக் காரணமாய் அமைகின்றன. அவர்களின் தலையாய கடமைகளை இனி காண்போம்.

மேலாளர்: விளையாட்டு விழாவிற்கு முக்கியப் பொறுப்பாளர் இவரே. நிகழ்ச்சிகள் உரிய காலத்தில் நடைபெறவும், ஆட்ட அதிகாரிகளைக் கண் காணிக்கவும், அவர்கள் பணியாற்ற வரத் தவறிய நேரத்து மாற்று அதிகாரிகளைக் கொண்டு அந் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தவும், ஆணையாளரின்