பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா 重 55 உதவியுடன் விளையாட்டு மைதானத்திற்குள் கூட்ட மில்லாது பார்த்துக் கொள்ளவும், வேற்றாட்கள் வேலையில்லாதவர்கள் உள்ளே புகுந்து விடாமல் காக்கவும் போன்ற பெருங் கடமைதனை ஏற்று, விழா முடிகின்ற வரை மேன்மையுடன் பணியாற்றுவார்.

செயலாளர்: செயலருடைய பணியிலேதான், வெற்றியே அடங்கிக் கிடக்கிறது. அவரது ஆக்கப் பணியின் செழிப்பிலேதான், ஊக்கமான உழைப் பிலேதான் போட்டி நிகழ்ச்சிகள் தாமதமில்லாமலும், தடையேதும் நிகழாமலும், பொங்கிவரும் புது வெள்ளம் பூரிப்புடன் பயிர்களுக்குப் பாய்வதுபோல நிகழ்ச்சிகள் நடக்க ஏதுவாக இருக்கின்றது.

செயலரின் சாமர்த்தியம், சாதுர்யம், கடின உழைப்பு, விழாவுக்கு அதிகம் தேவைப்படுகின்றன. இவரின் பொறுப்பு, எல்லோரும் நினைப்பது போல அவ்வளவு எளிதான காரியமல்ல.

இந்தப் பொறுப்பை ஏற்கும் மனிதர், திடசித்தம் உள்ளவராக இருக்க வேண்டும். அந்தப் பணியில் ஆர்வமும், உற்சாகமும், ஊக்கம் நிறைந்தவராகவும் இருக்க வேண்டும். எந்தவிதமான இன்னல் வந்தாலும் எதிர்ப்புக்கள் வந்தாலும், சமாதானத்துடன் சமாளித்துச் செல்கின்றவராக, ளதனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரையும் தெரிந்து வைத்துக்கொண்டு, அவர்களிடம் ஆதரவாகவும் அனுசரணையாகவும் நடந்து கொள்கின்ற திறமை பெற்றவராக, ஆற்றல் மிக்கவராக இருத்தல் வேண்டும்.