பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{||56 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?|}}


பிறரைத் தன் வயப்படுத்திக் கொள்கின்ற ஆற்றலுடன் மற்றவர்களிடம் மனம் கோணாதவாறு, எல்லோரையும் வேலையில் ஆர்வமுடையவராக மாற்றி வேலை வாங்கிக் கொள்கின்ற சக்தியையும் அவர் கொண்டவராக இருந்தால் காரியங்கள் மிகவும் நன்றாகவே நடக்கும்.

அவர் தனிப்பட்ட முறையிலே, ஏதும் செய்வதற் கில்லை என்றாலும், நடக்கின்ற காரியங்கள் அத்தனை யிலும், அவருடைய கண்காணிப்பு இருக்க வேண்டும். அவர் தந்திருக்கின்ற ஆணையின்படியே காரியங்கள் நடைபெறுகின்றனவா. அதனால் யாராவது பாதிக்கப் படுகிறார்களா, அந்தப் பணிகளில் ஏதாவது குறைகள் தென்படுகின்றனவா, எவராவது குறை கூறுகிறார்களா, நிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடந்தேறிச் செல் கின்றனவா என்பதையெல்லாம் செயலர் கூர்மையாகக் கவனித்துக்கொள்ள வேண்டும்.

விழா நாளன்று, ஒவ்வொரு நிகழ்ச்சியும், குறித்த நேரத்தில் நடக்கின்றனவா, பந்தய மைதானத் திற்குள் போட்டியிடும் உடலாளர்களும், பொறுப் புள்ள அதிகாரிகள் மட்டும்தான் இருக்கின்றார்களா, ஆர்வமுள்ள ரசிகர்கள் அடிக்கடி உள்ளே வந்து விட்டால் அவர்களை அமைதியாக அவரவர் இடங் களுக்கு அனுப்பி வைக்கவும், மனம் புண்படாதவாறு பேசி வெளியே அனுப்பவும் போன்ற செயல்களை மிகவும் பொறுப்புடனும் நிதானத்துடனும் செய்ய வேண்டும்.