பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எஸ். நவராஜ் செல்லையா [] 57


இவ்வளவு குணாதிசயங்களையும் செயலர் பெற்றிருந்தால், விழா எந்தவிதமான குந்தகமும் இன்றி விமரிசையாக நடந்தேறும்.

இவர் விழா நடப்பதற்கு முன்னே, பொதுக்குழு உறுப்பினர்களைக் கூட்டிக் கூட்டம் போடவும், அதற்கானக் குறிப்புக்களைத் தரவும், வெற்றிகரமாக விழா நடைபெற எல்லா ஆக்க வேலைகளைத் தொடர்ந்து நடத்தவும் கடிதப் போக்குவரத்து மற்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப் பெற்ற வேலைகளைத் தாமதமின்றி செய்து முடிக்கவும் போன்ற உரிமை களையும் கடமைகளையும் விரும்பி மனதாரச் சுமந்து பணியாற்றுகின்றார்,

நுண்ணியல் மேலளார்:இவர் மேலாளரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிகிறார். பந்தயப் பாதைகள் (Track) எறியும் வட்டங்கள், தாண்டுகின்ற பரப்புகள், முதலியனவெல்லாம் தரமாகவும், வள மாகவும் விதிகளின்படியேயும் அமைக்கப்பட்டிருக் கின்றனவா என்பதைக் கண்காணிக்கின்றார்.

போட்டி நிகழ்ச்சிகளுக்குப் பயன்படும் சாதனங் கள், குறிப்பேடுகள், பதிவேடுகள், மற்றும் முக்கிய மான அட்டைகள் அனைத்தும் விதிகளுக்குட் பட்டவாறு தயார் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதையும், தேவையான சமயத்தில் அதிகாரி களுக்குத் தந்துதவும் போன்ற பொறுப்புகளுடன் பணியாற்றுகின்றவராக இருக்கின்றார்.