பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 விளையாட்டு விழா நடத்துவது எப்படி?

 ஒடும் இடங்களுக்கு முன்னே இருக்கும் கோட்டில் கால்களையோ, கைகளையோ வைக்காமலும் அந்தக் கோட்டை கடந்து விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். மீறுகின்றவரை சுட்டிக்காட்டித் தவற்றைத் திருத்த வேண்டும். மீறி நடப்பவர்களை ஒடவிடுபவரிடம் கூற ஏற்பனவற்றைச் சரியான சமயத்தில் செய்ய வேண்டும்.

சரியான, குறித்த நேரத்தில், ஒடும் நிகழ்ச்சிகள் நடந்தேறுவதற்கு இவரே காரணமாக இருப்பதால் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே இயங்க வேண்டும். ஒட்டத்தில் பங்கு கொள்வோர், வேண்டுமென்றே ஒட வராமல் தாமதப்படுத்துவார்கள். அவர்களையெல்லாம் அழைத்து உரிய முறைப்படி பெயர்களை எழுதி, நிகழ்ச்சிக்குத் தயாராக வைத்திருந்தால்தான் ஒட விடுபவரால் எளிதாக நிகழ்ச்சிகளை நடத்திச் செல்ல முடியும்.

யாருக்காகவும் காத்திருந்து நிகழ்ச்சியைக் காலங்கடத்தாமல் செயல்படுத்த, இவர் தூண்டுகோலாக இருக்க வேண்டும். ஒட்ட நிகழ்ச்சி முடிந்தவுடனே, அவர்கள் அங்கே நின்றுகொண்டு கும்பலாக நிற்காமலும், கூட்டம் போடாமலும் பார்த்து மைதானத்தைவிட்டு வெளியேற்றிவிட வேண்டும்.

அவர்களில் ஒரு சிலர் அங்கேயே இருக்க வேண்டும் என்ற கட்டாய சூர்நிலையில் இருந்தால், அவ்வாறு அவர்கள் நிற்கும் போது, வேடிக்கை பார்ப்பவர்களுக்கு மறைக்கக்கூடிய சூழ்நிலை அமைந்துவிடும். அதனால் அவர்களை அப்படியே