பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா [] 75

7. முடிவெல்லைத் துணை நடுவர்கள் (Judges at the Finish)

முடிவெல்லைக் கோட்டிலே நின்றுகொண்டு, ஒடிவருகின்றவர்களிலே வெற்றி பெறுகின்றவர்களை, முதல்வர், இரண்டாமவர், மூன்றாமவர் என்று கண்டு தேர்வு செய்வதற்காகக் குறைந்தது 4 துணை நடுவர் களாவது தேவைப்படுவர்.

அவர்கள், ஒடி வருகின்றவர்களின் தலையோ, கைகளோ, கால்களோ, நெஞ்சு பாகமோ அல்லது உடலின் ஏதாவது ஒரு பாகம் முடிவெல்லைக் கோட்டைக் கடந்திருக்கும் நிலையைப் பார்த்தே கண்டுபிடிக்க வேண்டும்.

முடிவெல்லைக் கோட்டைத் தொட்டால் மட்டும் போதாது. கோட்டைக் கடந்தவர்களே ஒட்டத்தை முடித்தவர்கள் என்று கருதப்படுவார்கள்.

துணை நடுவர்கள் தங்களுக்குள்ளேயே, யார் யாரைத் தேர்வு செய்வது (முதலாமவர், இரண்டா மவர் என்பதாக) ஒட்டப் பந்தயம் தொடங்கு வதற்கு முன்கூட்டியே தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்.

முடிவெல்லைக் கோட்டிலே இரு பக்கங்களிலும் நிறுத்தப்பட்டிருக்கும் கம்பங்களுக்குப் பின்னே கொஞ்ச தூரம் தள்ளியே நின்று கொண்டிருந்தால், ஒரே மாதிரியாக ஒன்று போல் நெருங்கி, ஒட்டி, ஒடி வருபவர்களைத் தெளிவாக கண்டு கொள்ளவும் தேர்வு செய்யவும் வசதியாக இருக்கும்.