பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி? அகில உலக அளவிலே நடக்கும் போட்டி என்றால், ஒவ்வொரு நாட்டையும் நினைவில் கொள்வர் தேசியப் போட்டி என்றால் மாநிலங்கள்; மாநிலப் போட்டி என்றால் மாவட்டங்கள் மாவட்டப் போட்டி என்றால் வட்டங்கள்; பள்ளிகள் என்றால் அவர் களுக்குள்ளே பிரிக்கப்பட்டிருக்கும் குழுவின்படியே (House) உடலாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்

ஆகவே, குழுவுக்கு ஒருவர் இருவர் என்று தேர்ந்தெடுத்து, இன்னும் அவரவர்களுடைய திறமை, அதற்கு முன் நிகழ்த்தியிருக்கும் சாதனை இவைகளை அறிந்து கொண்டு, திறமையுள்ளவர்களை யெல்லாம் ஒரே கட்டத்தில் ஒட விடாமல் பிரித்துப் பகுத்து, பல ஒடும் வரிசை முறைகளை ஏற்படுத்துவர். ஒரே வரிசை முறையில், ஒரே குழுவைச் சேர்ந்த பலர் பங்குகொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . நடுவர் ஏதாவது மாற்றியிருந்தாலொழிய, ஒரு போட்டியாளர் ஒரு ஒட்ட நிகழ்ச்சியின் முதல் கட்டத்தில் தன் பெயருள்ள ஒடும் வரிசை முறைப்படி, ஒரு முறைதான் ஒட வாய்ப்புண்டு.

போட்டியிடும் ஒட்டக்காரரை உடனுக்குடன் ஒட விட்டு இன்னல் தராமல் இருக்கும் பொருட்டு, ஒரு நிகழ்ச்சிக்கும் மற்றொரு நிகழ்ச்சிக்கும் இடை நேரமாக, ஒரு சில போட்டிக்குரிய விதிகளைக் குறித்திருக்கின்றனர். அவைகளை முடிந்தவரை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

200 மீட்டர் ஒட்டப் பந்தயம் வரைக்கும் ஒய்வு - 45 நிமிடங்கள் _