பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா T; 81 பட்டதாகவும், பிறர் அது பற்றித் தடை சொல்லாத நிலையிலும், மழை பெய்யும் காலத்தில் உடல் நனைந் தால் உள்ளழகினை வெளிப்படுத்துகின்ற மெல்லிய துணியல்லாதவற்றிலும் உடை அமைந்திருக்க வேண்டும்.

காலணி: போட்டியில் வெறுங்காலுடன் பங்கு பெறலாம். கால்களில் காலணி அணிந்தும் பங்கு பெறலாம்.

ஒரு காலுக்குக் காலணியும், மற்றொரு காலை வெறுங்காலாக வைத்துக்கொண்டும் பங்கு பெறலாம். காலணி உபயோகிப்பது என்பது, தரையிலே கால்களைப் பதித்துக் கொண்டு ஒட, ஒர் பிடிப்பு (Grip) இருக்க வேண்டும். போட்டி நேரத்தில் எந்த வித நோவும் பாதங்களுக்கு வரக்கூடாது என்பதற் காவே காலணிகளை அணிய வேண்டும் என்று கூறுகிறோம் . விருப்பம் உள்ளவர்கள் காலணிகளை அணிந்து கொள்ளலாம். வேண்டாதவர்கள் விருப்பம் போல நடந்து கொள்ளலாம். ஆனால், அணிந்து கொள்ளும் காலணி, கால்களுக்குப் பாதுகாப்புத் தருவதாக இருக்க வேண்டுமே தவிர, அது போட்டிக்கு ஊக்கம் தருகின்ற உதவி சாதனங்கள் இணைந்ததாக இருக்கக் கூடாது.

அணிந்து கொண்டிருக்கும் காலணிகள்ஓடவோ, தாண்டவோ தூண்டும் சாதனங்களைக் (Spring) கொண்டதாக இருக்கக் கூடாது. எல்லாவிதமான