பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா

89

 தாகத் தொடுகின்றானா, என்பதையும் கூர்ந்து நோக்க வேண்டும்.

கோட்டிற்கு அருகில் காலிருப்பவன் கோட்டைத் தன் உடலில் ஏதாவது ஒரு பாகத்தால் கடக்காமலிருக்ககூடும். அவனுக்கு ஒரு தப்படி பின்னாலிருப்பவன் உடலின் ஏதாவது ஒரு பாகத்தால் கோட்டை முதலில் கடந்திருக்கக்கூடும். ஆகவே, இது பிரச்சினையை எழுப்பக்கூடிய இக்கட்டான இடமாதலால் எல்லோரும் சுறுசுறுப்பாக இருந்து கவனித்துக் தெளிவு செய்ய வேண்டும்.

முடிவெல்லைத் துணை நடுவர்களுக்குத் தலைமை தாங்குவோர், ஒட்டத்தைத் தொடங்கு வதற்கு முன்னரே, தாங்கள் யார் என்று கூறுவதற்கு முன்னரே, துணை நடுவர்களைத் தயாராக்கி விட்டுத்தான் சைகை தரவேண்டும். நடுவர் இந்த விஷயத்தில் ஒடவிடுபவருடன் மிகவும் நெருங்கி ஒத்துழைக்க வேண்டும்.

ஒடிவருகின்ற உடலாளர்களை நடுவர்கள் கடைசி 15 அல்லுது 20 கெஜ தூரத்திலிருந்தே உன்னிப் பாகக் கண்காணித்துக் கொண்டு வரவேண்டும். அவர்கள் நெருங்கி வர வர முடிவெ ல்லைக் கோட்டில் பிடித்திருக்கும் கம்பளி நூலின் மேலேயே கவனமாகத் தங்கள் கண்ணோட்டத்தைப் பதித்திருக்க வேண்டும்.

அவன் கோட்டைக் கடந்து ஒடிய பிறகும்கூட அவனது எண்களின்மீதே தான் கண்காணிப்பவர் கண்களும் தொடர்ந்து செல்ல வேண்டும்.