பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



1.

விழாவின் அருமையும் பெருமையும்

டலை உயிராகக் காக்கின்ற கல்வி; உடலின் மூலமே உடலுக்காகப் பயிற்சி தருகின்ற கல்வி; உலக வாழ்விலே உயர்வுகாண உடலைப் பாதுகாத்தால் தான் முடியும்’ என்ற உயர்ந்த கருத்தை உலகுக்கு உணர்த்திடும் கல்வி; உடலைக் காப்பது ஒரு ஒப்பற்றக் கலை! உடலை வளர்ப்பது ஒரு பேரின்ப நிலை’ என்ற உண்மையை உள்ளத்தில் படுமாறு செயல் படும் கல்விதான் உடலியற் கல்வி'யாகும் (Physical Education).

வழிகள் எத்தனையோ இருந்தாலும், வாழ்க் கையை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவது விளையாட்டுக் களே! எனவேதான், விளையாட்டை எல்லோரும் விரும்பி ஆடுகின்றனர். விரும்பி வேடிக்கைப் பார்க்கின்றனர். விரும்பிப் பேசி மகிழ்கின்றனர்.

விளையாட்டுக்கள் பலவிதம் என்றாலும், அவைகளிலே உன்னதமான இடத்தை, ஒப்பற்ற நிலையை வகிப்பது உடலாண்மை நிகழ்ச்சியே’ (Athletic Events). உடலாண்மை நிகழ்ச்சிகள் என்று ஏன் கூறுகிறோம் என்றால், உடலுக்குத் தேவை ஆண்மை,