பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



90

விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


இதேபோல்தான் எல்லா மாதிரியான விரை வோட்டங்களுக்கும் முடிவெடுக்கும் முறையைப் பின்பற்ற வேண்டும்.

நெட்டோட்டங்கள் (Long distance) அனைத்திலும், இவ்வளவு 'ஒன்றுபோல் ஓடிவரும் நிலை’ இருக்காது என்றாலும், நடுவர்கள் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது.

உயரே பறந்து கொண்டிருந்தாலும் கோழிக் குஞ்சு மேலே கண்ணோட்டத்துடன் இருக்கும் கருடன் போல, ஒடி வருகின்ற மீனுக்காகக் காத்திருக்கும் கொக்காகக் காத்திருப்பது முடிவினை எடுக்கின்ற போதும்கூட, குழப்பம் வந்துவிடும். அந்த சூழ்நிலை அப்படித்தான் உருவாகிவிடும்.

இரண்டு பேர் இயல்பாகவே "சமமாகவே வந்து விட்டார்கள்’ என்ற நிலையும் ஏற்படும். அப்போது இரண்டு பேரையுமே 'முதலாவதாக வந்தார்கள், என்று கூறிவிடவும் முடியாது. அந்தச் சமநிலையை (Tie) எவ்வாறு தவிர்ப்பது என்பதை நடுவருக்குரிய பொறுப்பு என்று விட்டுவிட வேண்டும்.

சமநிலையை சமாளித்தல்: ஒட்டப் பந்தயங்களில் முதல் கட்ட நிலையில் (Heat) சமநிலை ஏற்பட்டால், அடுத்தக் கட்டப் பந்தயங்களில் கலந்து கொள்ளலாம் என்ற சூழ்நிலை இருக்கிறது என்று நடுவர் கருதினால், மீண்டும் அவர்களைப் போட்டியின்றி அடுத்தக் கட்டத்திற்கு இருவரையும் அனுப்பலாம். நேரமும் காலமும் சூழ்நிலையும்