பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எஸ். நவராஜ் செல்லையா

91


இருந்தால், அவர்களை மீண்டும் போட்டியில் ஒடச்செய்து முடிவெடுக்க வேண்டும்.

இறுதிப் போட்டியில் (Final) முதலாவது இடத்திற்கு இருவர் இடையே ஏற்பட்டு சமநிலை ஒடவைப்பதா இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் நடுவருக்கே உண்டு.

மீண்டும் போட்டி நடுத்துவதற்கேற்ற கால அவகாசமும், சந்தர்ப்ப சூழ்நிலையும் அமைந்தால், அமையும் என்று நடுவர் கருதினால், போட்டியை நடத்தலாம். அவ்வாறு நடத்த இயலாது என்று நடுவர் முடிவெடுத்தால், அந்த வெற்றியின் முடிவு அப்படியேதான் இருக்கும். இருவருக்குமே 'முதலிடம்' என்று தீர்மானிக்கப்பெறும்.

தொடரோட்டப் போட்டி (Relay Race): தொட ரோட்டப் போட்டியை நடத்தும் பொழுது, உடலாளர் கள் கையில் குறுந்தடி இருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

பங்குபெறுகின்றவர் அனைவரும் தங்களுக் குரிய இடங்களில் நிற்கின்றனரா என்பதையும், அவர்கள் கைமாற்றிக் கொள்ளும் பரப்பளவிலே குறுந்தடியை மாற்றிக் கொள்கின்றனரா என் பதையும் அவசியம் உன்னிப்பாகக் கவனிக்க வேண் டும். தவறுக்குள்ளான குழு, போட்டியிலிருந்தே விலக்கப்படுவதால், முடிவெடுப்பதற்கு முன்னர், நாம் விழிப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும்.