பக்கம்:விளையும் பயிர்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்த் தாத்தா

யார் வீட்டிலாவது பழைய நகையோ, பாத்திரமோ இருந்தால் அதை லேசில் அழிக்க மனசு வராது.

“எங்கள் தாத்தாவுக்குத் தாத்தா காலம் முதல் இது எங்கள் வீட்டில் இருக்கிறது; ஆகிவந்தது' என்று பெருமையாகச் சொல் லிக்கொள்வார்கள். இப்படியே, 'இந்த நிலம் நூறு வருஷத்துக்கு மேலாக எங்கள் குடும்பத்தில் இருக்கிறது” என்று சொல்லுவார் கள். நூறு வருஷம் கிடக்கட்டும். இருநூறு வருஷம், முந்நூறு வருஷம், நானூறு வருஷமாக இருந்து வரும் அருமையான சொத்து நமக்குக் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்! இதெல்லாம் நூற்றுக்கணக்கு. இரண்டாயிரம் வருஷகாலமாக இருந்த சொத்து மறைந்து போய்த் திடீரென்று கிடைக்கிறது. அப்போது நாம் எப்படித் துள்ளிக் குதிப்போம்!

தமிழ்த் தாத்தா மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் அப்படித்தான் துள்ளிக் குதித்தார். தமிழ் நாட்டையே சந்தோஷமாகத் துள்ளிக் குதிக்கச்செய்தார். இரண் டாயிரம் வருஷங்களுக்கு முன் இருந்த வித்வான்கள் எத்தனேயோ பாடல்களைப் பாடினார்கள். அவற்றையெல்லாம் சேர்த்துப் புத்தகமாக்கி வைத்தார்கள். பழைய காலத்தில் அச்சுப் புத்தகம் இல்லை. பனையோலையில் எழுதிச் சுவடியாகச் சேர்த்து வைப்பார் கள். இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் தமிழ் நாட்டில் தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்தது. அதில் பல புலவர்கள் இருந்தார்கள். அவர்கள் பாடிய பாடல்களெல்லாம் ஏட்டுச் சுவடிகளில் இருந்தன.

அந்தச் சுவடிகளைப் பாது காப்பவர் இல்லாமல், எங்கோ மூலையில் கிடந்தன. அ ந் த ப் - ) பாடல்களைப் படிக்கிறவர்களும் இல்லை. அதனால் அந்தக் கவிகளினால் தெளிவாகும் செய்திகள்