பக்கம்:விளையும் பயிர்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆஸாத்தின் தாயார் அரேபியாவில் பிறந்தவர். அவர் தாய் மொழி அரபு பாஷை தகப்பனரோ இந்தியர். அவர் தாய்மொழி உருது. ஆகவே இரண்டு பாஷைகளிலும் ஆஸாத்துக்கு அறிவு இயற்கையாகவே அதிகமாக இருந்தது. அதோடு அவரு டைய கூர்மையான அறிவு எத்தகைய படிப்பானாலும் வெகு சீக்கி ரத்தில் பற்றிக் .கொண்ட து. அரபு பாஷையி லேயே கணிதம், தர்க்கம், பூகோ ளம், சரித்திரம் முதலிய எல்லாப் பாடங்களை யும் இவர் கற் றா ர். இவர் கற்ற கல் வித்திட்டம் பழை மையா ன து. சா மா னி ய மாணா க்க னா க இருந்தால், அந் தத் திட்டத்தின் படி க ற்று த் தேர்ச்சி பெற 14 வ ரு ஷ ங் க ள் ஆகும். கெட்டிக் காரப் பையனாக இரு ந் தால் 10 வருஷ ங் களி ல் ப டி க்க லாம்.

ஆனால் ஆஸாத்

படித்த வேகம் இந்தக் கணக்கில் அடங்கவே இல்லை. அதைச் சொன்னால் நீங்கள் நம்பக்கூட மாட்டீர்கள். நாலே வருஷத்தில் அந்தப் படிப்பை இவர் படித்துவிட்டார் அது எப்படி என்று நீங்கள் பிரமிக்கலாம். சின்ன வயசில் மெக்காவில்

இருந்தபோதே அரபு பாஷையைப் படித்தார். பல விஷயங்களைத் தெரிந்து 

43