பக்கம்:விளையும் பயிர்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையும் பயிர் .

செய்கிற வேலை இது. இல்லாவிட்டால், இந்தப்பையனாவது இந்தப் பாட்டைப் பாடவதாவது எவ்வளவு நாளைக்கு இந்தத் திருட்டு நடை பெறும்? நான் ஒரு நாள் கண்டு பிடித்துவிடுவேன்' என்று மனசுக் குள் எண்ணியிருந்தார். ஆம்; அவர் கண்டுபிடித்துவிட்டார். எப்ப டித் தெரியுமா? அந்த வேடிக்கையைக் கேளுங்கள்:


ஒரு நாள் ஆஸாத் ஒரு புத்தகக் கடையில் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக்கொண் டிருந்தார். புத்தகப் பைத்தியம் அல்லவா? அப்போது அந்த வழியாக காதிர்கான் என்ற கவிஞர் போனார். அவர் ஆஸாத்தைப் பார்த்தார். இந்தப் பையன் வண்ட வாளத்தை இப்போது தெரிந்துகொள்ளலாம். சரியானபடி சிக்கவைத்து இவனுடைய திருட்டுத்தனத்தை வெளிப்படுத்த லாம் என்று எண்ணி அந்தக் கடைக்குள் போனார். 'ஏ பையா, கவி சம்மேளனத்தில் பல கவிகளைச் சொல்வதைக் கேட்டிருக் கிறேன். அவைகளெல்லாம் நீயே இயற்றியவை என்று எப்படிச் சொல்வது? நீ உண்மையிலேயே கவி இயற்றும் சாமர்த்தியம் உடையவனாக இருந்தால், இப்போது அதைக் காட்டு பார்க்கலாம் 'யாத்கஹோ, ஷாத்கஹோ, அபாக்கஹோ-இவைகளை வைத்துப் பாடு பார்க்கலாம்" என்றார். பையன் பல்லைக் காட்டிப் பரக்க விழிப்பான் என்று அவர் எதிர்பார்த்தார்.

ஆஸாத் அதைக் கேட்டார். அவருக்குச் சிறிது கோபம் வந்தது. கடை வீதியில் நாலு பேருக்கு முன்னிலையில் இப்படிக் கேட்கிறாரே என்று ரோசமாக இருந்தது. அந்த ரோசம் அவரு டைய சக்தியைத் தாண்டிவிட்டது. சடசடவென்று கவிதையைச் சொல்ல ஆரம்பித்தார்.காதிர்கான் காதில் அவை விழுந்தன. அவருக்கு ஒன்றுமே தோன்றவில்லை. பிரமித்துப் போனார். 'ஹாஹா ஹா' என்று கூத்தாடினர். அவ்வளவு பேருக்கு நடுவில் தம்முடைய அறியாமையை ஒப்புக்கொண்டார். "உண்மையில்

சிறந்த கவி அப்பா! நான் இதுவரையில் நம்பவில்லை. எல்லாம் ஏமாற்றமென்று நினைத்தேன். நீ மகா கெட்டிக்காரன். எத்தனையோ பேர் கவி பாடுகிறார்கள். ஆனாலும் உனக்குச் சமான மாகச் சிலரே இருக்கக்கூடும். நீ தீர்க்காயுளாக வாழவேண்டும்' என்று ஆசீர்வாதம் செய்தார்.

பதினாலு பதினைந்து வயசிலே லிஸானஸ் ஸிதிக் என்ற பத்திரிக்கை

ஒன்றை இவர் நடத்திவந்தார். 'உண்மை வாக்கு: 46.