பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 விளையும் பயிர் முளையிலே தெரியும் Ğusifii' Ği_m (pĞ&Töölöfl5bu (Benito Mussolini) மார்க்கோனி பின்பற்றி அவருடைய பாசிஸ்ட் கட்சியிலே சேர்ந்தார். மார்க்கோனிக்கு முசோலினி மார்க்விஸ்’ (Marquis) என்ற வழி வழியாக வரக்கூடிய மரபு வழிப் பட்டத்தை வழங்கினார். இவ்வாறு சிறப்புகள் பெற்ற மார்க்கோனி 1937 ஆம் ஆண்டு வாழ்வை முடித்து நீண்ட ஒய்வு பெற்றார். 15. பெனிசிலின் கண்ட பேரறிஞர் “ஒன்றை கினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல்” (27) என்பது ஒளவையின் நல்வழிப் பாடல் பகுதி. நினையாதது - - நாம் ஒரு செயலைத் தொடங்கிச் செய்யும்போது அது கைகூடினாலும் கூடலாம் - கூடாமலும் போகலாம். அல்லது, நாம் நினைக்காத விளைவு வேறு ஏதாவது ஏற்படினும் ஏற்படலாம். கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதுபோல் என ஒரு பழமொழி உண்டு. இது நினைக்காத வேறு விளைவு தான். வேறு விளைவு நன்மை தருவதாயின் தொல்லை யில்லை. தீமை தருவதாய் இருக்கக் கூடாது.