பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 11 புகழ் வாய்ந்த கிரேக்க அறிவியல் அறிஞர் பூக்கிலிட் என்பவர். இவருடைய புகழ்மிக்க மாணவர் “சீனான்’ என்பவர். இந்த சீனானின் புகழ்பெற்ற மாணாக்கர்தான் ஆர்க்கிமிடீஸ். எனவே, சிறந்த அறிவியல் மரபில் (அறிவியல் பரம்பரையில்) வந்தவர் ஆர்க்கிமிடீஸ் என்பது புலனாகும் தாய் பத்தடி தாண்டினால் குட்டி பதினாறடி தாண்டும் என்னும் பழமொழிக்கு ஏற்ப, ஆர்க்கிமிடீஸ் உயரிய ஆய்வுகள் பல செய்ததன் வாயிலாகத் தம் முன்னோடி ஆசான் கட்குப் பெருமை குவித்தார். கணிதத்திலும் தத்துவத் திலும் வல்லமை பெற்றார். ஆர்க்கிமிடீஸ் விதி சைரக்யூஸ் மன்னன் ஹையீரோவுக்கு ஒரு முறை ஒரு குழப்பம் ஏற்பட்டது. பொற்கொல்லனைக் கொண்டு ஒரு தங்க மகுடத்தைச் செய்வித்து அரசன் அணிந்து கொண்டான். ஆனால், அந்தத் தங்க மகுடம் முழுவதுமே தூய தங்கத்தால் செய்யப்பட்டிருக்குமா? அல்லது, பொற்கொல்லன் மட்டமான உலோகங்களையும் தங்கத் துடன் கலந்து செய்திருப்பானா? -என்ற ஐயப்பாடு அவனது உள்ளத்தை ஆட்டுவித்தது. இதை எவ்வாறு கண்டுபிடிப்பது? தக்க சான்று இன்றிப் பொற்கொல்லனை விசாரிக்க முடியாது. அரசனுக்கு ஒரு வழி தென் பட்டது. அதாவது:- - அரசன், தனக்கு அமைச்சரைப் போலவும் அவைக்கள அறிஞராகவும் உடனிருந்த ஆர்க்கிமிடீசை நோக்கி இதைக் கண்டுபிடித்துக் கூறுமாறு பணித்தான்.