பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 17 அழுத்தம் திருத்தமாகக் கூறின்ார்; பல ஆய்வு நூல்களும் எழுதினார். ஆனால் அதற்குமுன் மக்கள், ஞாயிறு தான் பூமியைச் சுற்றி வருகிறது என்று நம்பியிருந்தார்கள். நாம் புகைவண்டியில் பயணம் செய்யும் போது, வழியில் உள்ள மரம், கட்டிடம் முதலியவை சுற்றுவது போல் தோன்றுகின்றன அல்லவா - அது போன்ற தோற்றமே இது. இதனைக் கலிலியோவும் அறிவித்தார். இந்தக் கொள்கையை ஏற்காத பழமைவாதிகள், பைசா நகரப் பல்கலைக் கழகப் பணியிலிருந்து கலிலியோவைத் துரத்தி விட்டனர். இவரை, மதங்களை மறுப்பவர் என்னும் குற்றம் சாட்டி இறப்பு ஒறுப்பு (மரணதண்டனை) கொடுக்கும் அளவுக்கு நீதி மன்றத்திற்குக் கொண்டு சென்றனர். கலிலியோவே தம் கொள்கையைத் தவறு எனக் கூறி அறிக்கைவிடின், மன்னித்து விடுவதாகக் கூறினர். இவரும் அவ்வாறு செய்து உயிர் தப்பினார். உயிர் இருந்தால் பின்னர் எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம் அல்லவா? ஊசல் தத்துவம் கலிலியோ மேலும் தமது பல்வேறு ஆய்வுகளைத் தொடர்ந்து கொண்டிருந்தார். கியூட்டனின் ஆய்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் கலிலியோதான் என்று கூறப்படுகின்றார். ஒரு நாள் மாதா கோயிலுக்குச் சென்றபோது, அங்கே தொங்கிய விளக்கு ஊசலாடிக் கொண்