பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 27 ஒரு திங்கள் இதழில் (பத்திரிகையில்) வந்த ஒரு நகைச்சுவைத் துணுக்கு நினைவிற்கு வருகிறது. ஐரோப்பாவில் ஒரிடத்தில் வித்தை காட்டும் ஒருவன் சிறியதும் பெரியதுமாக இரண்டு மண்டை ஓடுகள் வைத்திருந்தானாம். இவை யாருடைய மண்டை ஓடுகள் என்று அங்கிருந்தவர்கள் கேட்டனராம். நெப்போலியன் மண்டை ஒடுகள் என்ற பதில் வந்ததாம். நெப்போலியனுக்கு இரண்டு மண்டைகள் ஏது என வினவினராம். நெப்போலியன் சிறியவனாயிருந்தபோது இருந்தது சிறிய மண்டை ஒடு - அவன் பெரியவனான்பின் வளர்ந் திருந்தது பெரிய மண்டை ஓடு என்ற பதில் வந்ததாம். இது வேடிக்கையா யிருக்கிறதல்லவா? ஒரே சிறிய மண்டை ஒடுதானே வளர்ந்து பெரிய மண்டை ஓடாகும்? இது போன்ற வேடிக்கையே, தாய்ப் பூனைக்கும் குட்டிப் பூனைக்குமாக இரண்டு துளைகள் போட்டது! இரண்டு ஏன் என்று கேலி செய்பவர்கட்கு, தாயும் குட்டியும் ஒரே நேரத்தில் நுழையப் போட்டி போட்டால் என்ன செய்வது - தாய் நுழையும் போதே குட்டியும் நுழைய வேண்டி நேர்ந்தால் சிறிய துளை உதவும் என்பதற்காக இரு துளைகள் போடப்பட்டன எனச் கூறிச் சமாளிக்கக் கூடாதா? விருதுகள் Ꮮ]6Ꭷ அடைவுகளை - சாதனைகளைப் புரிந்த நியூட்டன் 1689 ஆம் ஆண்டு இங்கிலாந்துப் பாராளு மன்ற (பார்லிமென்ட்) உறுப்பினரானார். 1696 ஆம்