பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 விளையும் பயிர் முளையிலே தெரியும் இதனால் கண்ணின் இன்றியமையாமை புலப்படும். இது சொல்லித்தானா தெரிய வேண்டும் என்று கேட்கலாம் - சொல்லியும் பலருக்குத் தெரியவில்லையே. கண் என்ற உறுப்பு இன்றிமையாதது - அது இன்றேல் வாழ்வு அரிது - கண்களை ിക്കു கவனமாகக் காக்க வேண்டும் - கண்களில் சிறிது குறைபாடு தெரியினும் அதற்கு ஏற்ற உணவும் மருந்தும் உட்கொள்ள வேண்டும்என்ற கவனமோ - எண்ணமோ பலருக்கு இருப்பதில்லை. கண்கெட்ட பிறகே ஞாயிறு வணக்கம் செய்யத் தொடங்கு கின்றனர். கண் தெரியாமல் வருந்துவோரைக் கண்ட பிறகு தான் கண்ணைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுகிறது. கண் திறக்கப்படுகின்றது. கண்ணைப் போற்றிக் காக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சியைக் கண் தெரிபவர்க்குக் கண் தெரியாதவர்கள் உண்டாக்குகின்றனர். இதனால் இவர்களைக் கண்ணப்பர்கள் என்று கூறலாம். கண் தெரிபவர்கள் கண் தெரியாதவர்கட்கு அனைத்து உதவி களும் செய்யக் கடமைப்பட் டுள்ளார்கள். கண் தெரியா தவரே தம்மைப்போல் கண் தெரியாத மற்றவர்க்கு உதவும் போது, கண் தெரிபவர்கள் கண் தெரியாதவர்கட்கு உதவ வேண்டியது பெரிய கடமையல்லவா? தமக்குக் கண் தெரியாதிருந்தும், கண் தெரியாத மற்றவர்கட்கு உதவி செய்த மாமேதை ஒருவர் இருந்தார். எண்ணும் எழுத்துமே கண்கள் என மேலே சொல்லப் பட்டது. கண் தெரியாதவர்கட்கு இந்த எண்ணும்