பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார். 45 திரிபு மாற்றக் கொள்கை இனி, திரிபு மாற்றக் கொள்கையின ராகிய (Evolutionis) டார்வின் கொள்கையின் சுருக்கம் வரு மாறு ஞாயிற்றிலிருந்து இற்றுத் தெறித்த ஒரு பொறியாகிய - நாம் வாழும் - இப்பூவுலகம் நாளடைவில் மேற்பகுதி குளிர்ச்சி அடைய அடையத் தண்ணீர் உண்டாயிற்று. தண்ணீர்க் கடலிலிருந்து. கடல் பஞ்சு - கடல்பாசி போன்றதிலிருந்து சிறு சிறு உயிர்கள் உண்டாயின. அவற்றிலிருந்து ஊர்வன - பறப்பன - விலங்குகள் முதலியன முறையே படிப்படியாகத் தோன்றின. விலங்குகளுள் குரங்கிலிருந்து மனிதக் குரங்கு தோன்ற, அதிலிருந்து மனிதன் தோன்றினான். அதாவது, எந்த வகை உயிரினமும் தனித்துப் பிறந்த தனித்தன்மை உடைய தன்று. பின்தோன்றிய உயிரினங்கள் முன்தோன்றிய உயிரினங்களிலிருந்து வந்தவையே. எல்லா வகையான உயிரினங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையன. பல்வேறுவகை உயிரினங்கட்கும் தசை, எலும்பு, குருதி, கண், காது, மூக்கு, வாய் முதலிய உறுப்புகள் இருப்பது ஈண்டு எண்ணத் தக்கது. திரிபுமாற்றத்தால் (பரிணாமத் தால்) இவை படிப்படியாகத் திரிந்து மாறி வெவ்வேறு உயிரினங்களாகத் தோற்ற மளிக்கின்றன. முதலில் மீனை ஒத்திருக்கும் தலைப்பிரட்டை பின்னர்த் தவளையாக மாறுவதைக் காணலாம்-இப்படியாக டார்வின் கொள்கை பேசப்படுகிறது. இயற்கையின் தேர்வு மனிதக் குழந்தையைத் தாய் கை யிருப்பதால் தூக்கி வளர்க்கிறாள். மாடு கன்று போட்டால் அதற்குக் கை