பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 விளையும் பயிர் முளையிலே தெரியும் என எண்ணி அந்த ஆய்வில் ஆழ ஈடுபட்டார். ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. உயர்ந்த குறிக்கோளை எண்ணுக-அது தவறினும் தவறாதது போன்ற பெருமையே யாகும் என்னும் கருத்தில், 'உள்ளுவ தெல்லாம் உயர்வுஉள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து’ (596) இந்தக் குறள் உள்ளது. எனவே, புத்துயிர் படைக்கும் முயற்சியில் பாஸ்டர் தோல்வி கண்டாலும் அவரது முயற்சி பாராட்டத் தக்கது. அமிலம்-படிகம் ஆய்வின் முடிந்த எல்லையைக் கொண்டு புத்துயிர் படைக்கலாம் எனப் பாஸ்டர் எண்ணினார். உறுத்துதல், உணர்தல், இயக்குதல், வளர்தல் இன்ன பிற உயிர்ப் பண்புகளை உடைய கூழ் போன்ற உயிராற்றல் பொருள் உருவாயிற்று. இதற்குப் புரோட்டோ பிளாசம் (Protoplasam) என்று ஆங்கிலத்தில் பெயர் கூறப்படுகிறது. இந்த உயிராற்றல் பொருளே உயிருக்கு அடிப்படையாகும். இதிலிருந்து உயிர்கள் தோன்றின - (இது ஒருவகை வேதியியல் மாற்றச் செயலாகும்) என்பது அறிவியலார் ஒரு சிலரின் கருத் தாகும். மதவாதிகள் உயிர்களைக் கடவுள் படைத்தார் 6T60sl_jss. நுண்ணுயிர் ஆய்வு பாஸ்டர் நுண்பெருக்காடியின் (மைக்ரோஸ்கோப்) வாயிலாக நுண்ணுயிர்கள் (பாக்டெரியாஸ் - Bacterias) இருப்பதை அறிந்தார். இவற்றாலேயே வேதியியல்