பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

წ8 -------- விளையும் பயிர் முளையிலே தெரியும் எடிசன் எத்தனையோ தோல்விகளை நேரிட்டுப் பிறகு மேன்மேலும் முயன்று வெற்றி கண்டதால், தோல்வியை வெற்றிக் குன்றுக்கு ஏறும் முதல் படியாகக் கொள்ளல் வேண்டும். வறுமையை அர்ாத உழைப்பினால் அகற்றலாம். உழைப்பவர்கட்கு உலகில் தனிப் பெருமை உண்டு. இன்ன பிறவாம். இவர் 1031 ஆம் ஆண்டு நிலைத்த ஒய்வு பெற்றார். 11. தொல்காப்பியருக்கு மறுப்பு ஓரறிவு உயிர் தொல்காப்பியம் என்பது மிகவும் பழைய இலக்கண நூல். அதை இயற்றியவர் தொல்காப்பியர். அவர் பெயராலேயே நூலுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. உயிர்கட்கு உள்ள உற்றறிதல், சுவையறிதல், மணம் அறிதல், பார்த்தறிதல், கேட்டறிதல், பகுத்தறிதல் என்னும் ஆறு அறிவுகளுள் உற்றறிதல் அதாவது தொட் டறிதல் என்னும் ஓர் அறிவு மட்டுமே மரம், செடி, கொடி, புல், பூண்டு ஆகிய தாவரங்கட்கு உண்டு எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார்: "புல்லும் மரனும் ஓர்அறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே' (3:9:28)