பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 விளையும் பயிர் முளையிலே தெரியும் தன்மானம் போஸ் தாய் நாடு திரும்பியதும், கல்கத்தா பல்கலைக் கழகத்தில் அறிவியல் (இயற்பியல்) பேராசிரியராக 1885 ஆம் ஆண்டு முதல் 1915 ஆம் ஆண்டு வரை பணி புரிந்தார். அந்தப் பல்கலைக் கழகத்தில் போஸ் ஒருவர் மட்டுமே இந்தியர். மற்ற பேராசிரியர்கள் அனைவரும் ஆங்கிலேயர்கள். எனவே, ஆங்கிலேயர்களுக்கு மிகுந்த ஊதியமும் அதில் பாதியளவு போசுக்கும் கொடுக்கப் பட்டன. போசால் இதைப் பொறுக்க முடியவில்லை. கேட்டுப் பார்த்தார் - சிறிது காலம் ஊதியம் பெறாமலேயே ஊக்கத்துடன் கற்பித்தார். மூன்றாண்டுப் போராட்டத் திற்குப் பின் போசுக்கும் சமமான ஊதியம் வழங்கப் பட்டது. சந்திரபோசின் தன்மான உணர்வு மிகவும் பாராட்டத் தக்கது. உலகின் எந்தப் பகுதியானாலும், இத்தகைய போக்கு மிகவும் கண்டிக்கத் தக்கது. ஒரு காலத்தில் - தமிழ்நாட்டுப் பள்ளிகளில் - மற்ற பாடங்களின் ஆசிரியர்களின் ஊதியத்தைக் காட்டிலும் குறைந்த ஊதியம் தமிழாசிரியர் கட்குக் கொடுக்கப்பட்டது. பி ன் ன ர், பெரும் போராட்டத்தின் விளைவாகத் தமிழாசிரியர்கட்கும் சமமான ஊதியம் வழங்கப் பட்டது. தமிழ்நாட்டிலேயே - நாட்டின் தாய் மொழியைக் கற்பிக்கும் தமிழாசிரியர்கட்கே இந்த நிலை என்றால் - தமிழாசிரியர்களின் பெயர்கள் கடைசியில் எழுதப்பட்டு இறுதி மரியாதை கொடுக்கப்பட்ட தென்றால், ஆங்கிலே