பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 விளையும் பயிர் முளையிலே தெரியும் கொள்ளலாம் என் அவர்கட்கு இவர் தந்த வள்ளன்மையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 1916 ஆம் ஆண்டு இவருக்கு நைட் பட்டம் கிடைத்தது. ‘சர்’ பட்டம் பெற்று, முளையிலேயே விளையத் தொடங்கிய பயிராகிய சகதீச சந்திரபோஸ் 1973 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் ஊனுடல் துறந்து புகழுடல் பெற்றார். 12. மனிதப் பறவைகள் அறிமுகம் ஒருவர் ஒரு செயலில் தேவைக்குமேல் விரைவு படுத்தின் - அவசரப்படின், ஏன் பறக்கிறாய்? என்று மற்றொருவர் வினவுவதுண்டு. மேலே பறந்து சென்றால் அடைய வேண்டிய இடத்தை விரைந்து சென்று அடைந்து விடலாம். அதனால், பறத்தல் என்பது, அவசரப்படுதல் என்னும் பொருளைத் தருவதாயிற்று. பறக்கும் உயிர்கட்கு இறக்கைகள் உண்டு. அந்த இறக்கைகளின் உதவியால் அவை பறக்கின்றன. மனிதன் பறப்பதற்கு உரிய துணைக்கருவி எதுவும் இன்றிப் பறக்கிறான் என்றால், அது, அவனது உள்ளத்து உணர்வின் விரைவைக் குறிக்கிறது. மேலே பறப்பது போல் நாம் கனவு கண்டதுண்டு.