பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் - - --- - - - - - - - - -- si உருளைகளை அமைத்தால், வானத்திலிருந்து ஊர்தி கீழே விழாமல் கிற்கச் செய்ய முடியும் என எண்ணினார்; ஆர்வில்லோடு கலந்து பேசினார். பலவாறு முயன்று 1900 ஆம் ஆண்டில் சறுக்கு விமானம் அமைத்தனர். 1903 டிசம்பரில் எந்திரத்தால் இயங்கும் ஊர்தியும் அமைத்து வெற்றி கண்டனர். அது, 55 கிலோ கிராம் எடையும், 12 மீட்டர் நீளமும், 12 குதிரை விரைவும், 4 சிலிண்டர்களும் கொண்டிருந்தது. 2.74 மீட்டர் நீளமான இறக்கைகளும் அமைக்கப் பட்டிருந்தன. இந்த ஊர்தி, ஒட்டுபவர் உட்பட 750 இராத்தல் உடையதாய், ஒரு மணிக்கு 30 மைல் விரைவில் 59 விநாடியில் 852 அடி தொலைவு பறந்தது. தொடக்கத்தில் பொது மக்களும் அமெரிக்க அரசும் இதற்கு ஊக்கம் அளிக்கவில்லை. இது நீண்ட தொலைவு பறக்காது; சாவிற்கு வழி கோலும் - என்று எண்ணப்பட்டது. பின்னர் விடா முயற்சியால் 1905-ஆம் ஆண்டு 39 மணித் துளியில் (கிமிடத்தில்) 24 மைல் பறந்தனர். 1906-ஆம் ஆண்டு இந்தக் கண்டுபிடிப்பு தங்கட்கே உரியது என்ற காப்புரிமை பெற்றனர். பாராட்டு அமெரிக்காவில் ஆதரவு இன்மையால் வில்பர்ட் பாரிஸ் நகர் சென்று ஒன்றே முக்கால் மணி நேரம் பறந்து காட்டினார். பிரான்சில் இதைப் பாராட்டி ‘tólås sóisir GGTůsou (Michelin Trophy) GAGĀTS