பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 89 துன்பம் துன்பம்’ என்று கூறுவார்களே - அந்த நிலைமை மேரிக்கு ஏற்பட்டது. கணவர் கியூரி நண்பர் ஒருவரின் வீட்டு விருந்திற்குச் சென்று திரும்பிய வழியில் ஒரு குதிரை வண்டியால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இன்னும் எத்தனையோ கண்டுபிடிப்புகளைச் செய்ய வேண்டும் எனக் கனவு கண்டிருந்த மேரி ஒரு சிறகு ஒடிந்த பறவையானார். மேரி ஒருவாறு தேறி மீண்டும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். ரேடியத்தைத் தனியாகப் பிரித்தெடுத்து உலகிற்கு அளித்தார். இதற்காக இவருக்கு இரண்டாவது முறையாக நோபெல் பரிசு கிடைத்தது. 1903 ஆம் ஆண்டில் நோபெல் பரிசும் ராயல் கழகத்தின் டேவி தங்கப் பதக்கமும் பெற்ற மேரிக்கு, பல்லாண்டு உழைத்த பின்னர் 1911 ஆம் ஆண்டு இந்த இரண்டாவது நோபெல் பரிசு கிடைத்தது. எவ்வளவு ஆய்வுப் பணி செய்யினும், மேரியால் இறந்து போன கணவரை மறக்க முடியவில்லை. ஒவ்வொரு நாள் இரவிலும் படுக்கைக்குச் செல்லுமுன் தம் கணவருக்குச் சொல்வதுபோல் கற்பனை செய்து கொண்டு அன்றன்றைக்குத் தாம் செய்த ஆய்வு களைக் குறித்து வைப்பாராம். ஆய்வு செய்வதற்குக் கண்கள் எவ்வளவோ உற்று நோக்க வேண்டும். அதன் பயனாய் 1920 ஆம் ஆண்டில்